காலையில் ரூ.500-க்கு விற்ற மீன் மாலையில் ரூ.50

By செய்திப்பிரிவு

இன்று ஊரடங்கால் நேற்று காலை முதல் மாலை வரை மீன் சந்தைகளில் வியாபாரம் களை கட்டியது. காலையில் கிலோ ரூ.500-க்கு விற்ற மீன்கள், நேரம் ஆக ஆக மாலையில் ரூ.50-க்கு விற்றது.

ஞாயிறு ஊரடங்கில் அத்தி யாவசியப் பொருட்கள் தவிர இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய நாளான நேற்றே அனைத்து இறைச்சி, மீன் கடை களிலும் மக்கள் திரண்டனர்.

ஆட்டிறைச்சி விலை அதிகம் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆனால், மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது. மாட்டுத்தாவணி மீன் கடைகளில் மக்கள் அதிக அளவில் திரண் டனர்.

காலையில் மீன் வகைகளை பொறுத்து ஒரு கிலோ மீன் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்றது. நேரம் செல்லச்செல்ல விலை குறைந்து காலையில் ரூ.500க்கு விற்ற மீன் மாலையில் ரூ.50-க்கு விற்றது.

இதைக் கேள்விப்பட்டு மாலை யில் ஏராளமானோர் திரண்டதால் வியாபாரம் களை கட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

57 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்