புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் 41 தண்டனைக் கைதிகளுக்கு கரோனா: பலத்த பாதுகாப்புடன் தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் 41 தண்டனைக் கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதால் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் 2 வார்டன்களுக்கும் தொற்று உறுதியாகி அரசு கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பாதிப்பின் போது புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு பரோல், பார்வையாளர்கள் அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

இந்த விதிமுறைகள் கடந்த சில மாதத்திற்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. சிறையில் உள்ள கைதிகளை, அவரது உறவினர் ஒருவர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. சில கைதிகள் பரோலில் விடுமுறையிலும் சென்று வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டனைக் கைதி ஒருவர் பூச்சி மருந்து கடித்ததாக, அரசு மருத்துவமனைக்குச் சென்று வந்தார். அவருடன் சிறை வார்டன் ஒருவரும், பாதுகாப்புப் பணிக்குச் சென்றார். இருவரும் சிறைக்கு வந்த 2 நாட்களில், லேசான காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள யார்டில் உள்ள மற்ற கைதிகளுக்கும் காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டது.

இதனால், காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சிறை வளாகத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடந்தது. தண்டனைக் கைதிகள் 73 பேர், 130 விசாரணைக் கைதிகள், 14 சிறை வார்டன்கள், கண்காணிப்பாளர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் சிறை துணைக் கண்காணிப்பாளர், வார்டன்கள் இருவர், 41 தண்டனைக் கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட தண்டனைக் கைதிகள் 41 பேரும் அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 41 தண்டனைக் கைதிகள் சிகிச்சையில் இருப்பதால் போலீஸார் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

21 mins ago

விளையாட்டு

29 mins ago

தமிழகம்

44 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

32 mins ago

தொழில்நுட்பம்

23 mins ago

மேலும்