இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது: போலீஸார் விடிய விடிய ரோந்து

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதையொட்டி, மதுரையில் பெரியார் பஸ் நிலையம், ஆரப் பாளையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் இரவு 9-க்கு மேல் மூடப்பட்டு கடைகள் அடைக்கப் பட்டு வெறிச்சோடின. பேருந்துகள் அனைத்தும் நேற்றிரவு 10 மணிக் குள் பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல் உதவி ஆணையர் தலை மையில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டனர். இரவு 10 மணி முதல் விடிய, விடிய போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். துணை ஆணையர்கள் நகர் முழுவதும் ரோந்தில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. விதி முறையை மீறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று இரவு மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்