முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பட்டுவாடா தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, நிறுத்தப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை நேற்று முதல் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விதவைகள், கணவனரால் கைவிடப் பட்ட பெண்கள், மாற்றுதிறனாளிகள், இலங்கை அகதி, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயி கள் ஓய்வூதியம் என 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம், உதவி தொகைகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த உதவித்தொகை ஒவ் வொரு மாதமும் 5-ம் தேதிக்குள், அவரவர் வங்கிக் கணக்கிலும், அஞ்சல் துறை மூலமும் பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகையை கொண்டு அவர்கள் தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்துக்கான உதவித்தொகை ஏப்.15-ம் தேதியைக் கடந்தும் வழங்கப்படா ததால், பயனாளிகள் பலரும் அவதியடைந்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறையால் முதல் வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் போன்ற மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்காமல் 32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் ஏப்.17-ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, உதவி்த் தொகைகளை வழங்க தமிழக அரசு உத்தர விட்டது.

அதன்படி, தமிழகம் முழுவ தும் நேற்று முதல் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் அவரவர் வங்கிக் கணக்குகளிலும், அஞ்சல் துறை மூலமும் பட்டுவாடா செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாது காப்பு இயக்கத்தின் தலைவர் சுந்தரவிமல்நாதன் கூறியது:

வழக்கமாக வழங்கப்படும் ஓய்வூதியத்தை சட்டப்பேரவை தேர்தல் விதிமுறையை கார ணம் காட்டி, தமிழக அரசின் தலைமை செயலகத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், மாற்றுதிறனாளிகள், முதியோர்கள் என தமிழகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டது தொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானதும், உதவித் தொகைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் நிறுத்தி வைக்கப் பட்ட உதவித்தொகை பட்டு வாடா செய்யும் பணி நேற்று தொடங்கியது.

இதற்கு ஏற்பாடு செய்த ‘இந்து தமிழ்' நாளிதழுக்கு எங்களது அமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என் றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

12 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்