அரசு மருத்துவமனை கட்டுவதற்கு கோயில் நிலம் கையகப்படுத்த தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அரசு மருத்துவமனை கட்டுவதற்கு கோயில் நிலத்தைக் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த சங்கரபாண்டியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தென்காசி வீரகேரளம் புதூரில் பிரசித்தி பெற்ற நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலம் தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக 18 ஆண்டுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. இதற்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.

இந்நிலையில் தற்போது அரசு மருத்துவமனை கட்டுவதற்காக மேலும் இரண்டு ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதற்கு தடை விதித்து, ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்திற்கு வட்டியுடன் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி .எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.வெங்கட்ரமணா வாதிட்டார்.

பின்னர் கோவில் நிலத்தை கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து, ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க முடியாவிட்டால் அந்த நிலத்தை ஏன் கோயிலுக்கே திரும்ப வழங்கக்கூடாது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஜூலை 19-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்