மத்திய அரசின் வலியுறுத்தலை உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றன: கரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் விலை குறைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று சிகிச்சைக்கு வழங்கப்படும் நோய்த் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் விலையை அரசின் தலையீட்டால் மருந்து தயா ரிப்பு நிறுவனங்கள் குறைத்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து கெடிலா ஹெல்த்கேர், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் சிப்லா உள்ளிட்ட பல்வேறு மருந்து தயா ரிப்பு நிறுவனங்கள் தங்களின் ரெம்டெசிவிர் மருந்தின் விலை யைக் குறைத்துள்ளன.

இதற்கு மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா வரவேற்பு தெரிவித்துள் ளார். மக்கள் அனைவரும் நெருக் கடியான சூழலை எதிர்கொண் டிருக்கும் நிலையில் மருந்துகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மருந்து நிறுவனங்களும் அரசின் அறிவுறுத்தலை ஏற்று விலையைக் குறைத்துள்ளன. அரசுக்கும் மருந்து நிறுவனங்களுக்கும் நன்றி என்று அவர் கூறினார்.

கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத் தின் ரெம்டெசிவிர் வகை ரெம்டாக் மருந்து ரூ.2,800-ல் இருந்து ரூ.899 ஆகவும் சிஞ்சென் இன்டர்நேஷ னல் நிறுவனத்தின் ரெம்வின் மருந்து ரூ.3,950-ல் இருந்து ரூ.2,450-ஆகவும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் ரெடிக்ஸ் ரூ.5,400-ல் இருந்து ரூ.2,700 ஆகவும் சிப்லா வின் சிப்ரெமி மருந்து ரூ.4,700-ல் இருந்து ரூ.3,400 ஆகவும் குறைக் கப்பட்டுள்ளது.

இதேபோல், மிலன் நிறுவனத் தின் மருந்து ரூ.4,800-ல் இருந்து ரூ.3,400 ஆகவும் ஜுபிலன்ட் ஜெனரிக்ஸ் நிறுவனத்தின் மருந்து ரூ.4,700-ல் இருந்து ரூ.3,400 ஆகவும் ஹெட்டிரோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் மருந்து ரூ.5,400-ல் இருந்து ரூ.3,490 ஆகவும் குறைக் கப்பட்டுள்ளது.

தினமும் 3 லட்சம் மருந்து

இதுகுறித்து டெல்லியில் செய்தி யாளர்களிடம் மத்திய ரசாயன மற்றும் உரத் துறை இணை அமைச் சர் மன்சுக் எல் மண்டாவியா நேற்று கூறியதாவது: கரோனா பர வல் அதிகரித்திருப்பதால், வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந் துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, இந்த மருந்து உற்பத்தி தற்போது பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி, இப்போது தினமும் 1.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இன்னும் இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இப்போதைய சூழலில் நாடு முழுவதும் 20 ஆலைகள் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தினை உற்பத்தி செய்கின்றன. தற்போது மேலும் 20 ஆலைகளுக்கு இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு மன்சுக் மண்டாவியா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்