குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாகமழை பெய்து வருகிறது. இதையொட்டி சமவெளிப் பகுதிகளில்இருந்து வனப்பகுதிகளுக்கு காட்டு யானைகள் வருகை அதிகரித் துள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் குட்டியுடன், காட்டு யானைகள்முகாமிட்டுள்ளன. அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வதால்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடுகன்தோட்டம், குறும்பாடி போன்ற பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது.நேற்று காலை கே.என்.ஆர். நகர் சாலையைக் குட்டியுடன், யானை கடந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் அரை மணிநேரத்துக்கு பிறகு யானைகள் சென்றன. அதன்பின் போக்குவரத்து தொடங்கியது.

வனத்துறையினர் கூறும்போது, ‘‘உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானைகள் சாலையை கடந்து செல்கின்றன. அப்போது அவற்றுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. யானைகளை கண்டால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும், வன விலங்குகளை சாலைகளில் கண்டால்,அவற்றை புகைப்படப் எடுக்கக் கூடாது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

க்ரைம்

6 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்