முழு அளவில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுப்பதாக புகார்: நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

By செய்திப்பிரிவு

அரசுப் பேருந்துகள் முழு அளவில் இயங்காத நிலையில், போக்குவரத்துக் கழகங்களில், சில பணிமனைகளில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு பணி வழங்குவதில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந் துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல மாதங்களாக நிறுத்தப்பட்ட பேருந்துகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக இயக்கப்பட்டன.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால், அரசுப் பேருந் துகளில் பொதுமக்கள் பயணிப்பது குறைந்துள்ளது.

இதனால், சில இடங்களில் பேருந்துகளின் சேவை குறைக் கப்பட்டு, தேவைக்கு ஏற்ப மட்டுமே பேருந்துகள் இயக்கப்படு கின்றன.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர் கூறும் போது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், பேருந்துகளும் குறைத்தே இயக்கப்படு கின்றன.

இதனால், இயங்காத பேருந்து களுக்கான தொழிலாளர்களுக்கு, சொந்த விடுப்பு வழங்கப்பட்டு, சம்பளம் பிடிக்கப்படுகிறது. இத னால், எங்களது மாத சம்பளமும் குறைகிறது.

எனவே, சுழற்சி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு பணி வழங்க போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நாளை ஆர்ப்பாட்டம்

இது தொடர்பாக சிஐடியு மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க நிர்வாகி தயானந் தன் கூறும்போது, ‘‘பேருந்துகள் சேவையைக் குறைப்பதால், ஒவ்வொரு பணிமனையிலும் தலா 60 பேர் வரை ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு பணி மறுக் கப்படுகிறது. ஆனால், மற்ற பிரிவுகளில் வரும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு வழக்கம் போல பணி வழங்கப்பட்டு வரு கிறது. சில பணிமனைகளில் தொழிலாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பணி வழங்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையை மாற்றக்கோரியும், ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தடையின்றி பணி வழங்கக் கோரியும் நாளை காலை போக்குவரத்து பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். அதன்பிறகு, பல்லவன் இல்லத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பங்கேற்கவுள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்