பயிர் காப்பீட்டு பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மழையால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கனமழையால் தமிழகம் முழு வதும் சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மழை தொடர்வதால் சேதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலை யில், பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை கட்டுவதற்கான காலக்கெடு டிசம்பர் 15-ம் தேதியு டன் முடிவடைகிறது.

இதை சில வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும். பிரீமியத் தொகையை அரசே கட்ட வேண்டும். பயிர்ச் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஐஜேகே நிறுவன தலைவர் பாரிவேந்தர்:

கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் தொழிற் சாலைகளும் நிறுவனங்களும் முற்றிலுமாக பாதிப்படைந் துள்ளன. தகவல் தொழில் நுட்பம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வணிக வளா கங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் பாதிப்படைந் துள்ளன. இவற்றில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் வேலை யிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இவற்றை கருத்தில்கொண்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங் களில் அனைத்து தொழிற்சாலைகள் மூலம் செலுத்தப்படும் உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டணம், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, காப்பீட்டு நிதி, ஆகியவை செலுத்தும் காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வட்டி யில்லா கடன் உதவி வழங்க அனைத்து வங்கிகளையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

7 mins ago

சினிமா

32 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

வணிகம்

18 mins ago

தமிழகம்

38 mins ago

இணைப்பிதழ்கள்

59 mins ago

மாவட்டங்கள்

51 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்