கோவில்பட்டியில் புதிய சாலையை காணவில்லை: நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மனு

By செய்திப்பிரிவு

புதிதாக அமைக்கப்பட்ட சாலையைக் காணவில்லை என, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மனு வழங்கினர்.

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் மா.முருகன் உடலில் மருந்து கட்டுகளுடன் நேற்று காலை மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.ராஜசேகர், அண்ணா தொழிற்சாலை தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், பாமக மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், கோவில்பட்டியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான புதுரோடு தேசிய நெடுஞ்சாலை சுமார் 20 மீட்டர் வரை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

தற்போது இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு காரணமாக 3 மீட்டர் அளவு தான் சாலை உள்ளது. மீதமுள்ள சாலையைக் காணவில்லை. 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவை வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எட்டயபுரம் - பருவக்குடி சாலையில் மாதாங்கோயில் தெரு சந்திப்பில் இருந்து இளையரசனேந்தல் சாலை சந்திப்பு வரை சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்புகளால் மாயமான சாலையை மீட்டுத்தர வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 mins ago

தமிழகம்

55 secs ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்