கரோனா பரவல் அதிகரிப்பால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொது செயலாளர் கே.திருச்செல்வன் தமிழக தலைமை செயலாளருக்கு தபால் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. எனவே, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும்.

அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்புகள், வரிசைப்படுத்தலை நடைமுறைப்படுத்த வேண்டும். ஏற்கெனவே இப்பணிகளை மேற்கொண்டபோது ஏற்பட்ட செலவினங்களுக்கான நிதி முறையாக வழங்கப்படவில்லை. தற்போது அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் சார்பில் செய்ய வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

நோய் தொற்றால் உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், ஊழியரது வாரிசுக்கு வேலையும் வழங்க வேண்டும். நோய் பரவக்கூடும் அபாயகரமான இடங்களாக உள்ள அனைத்து மதுக்கூடங்களை மூட வேண்டும். கரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் போர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்