கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் ரத்து : தேர் கட்டுமானப் பணிகளும் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப்.26-ம் தேதி நடைபெறவிருந்த சித் திரை பெரியத் தேரோட்டம் கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரண மாக, தேர் கட்டுமானப் பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்யப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், வில்லிப் புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப் பெரிய தேரோட்டம் நடைபெறும் தலமாகவும் இக்கோயில் போற்றப் படுகிறது.

இக்கோயிலில், தை முதல் நாளில் தைத் தேரோட்டமும், சித்திரை பவுர்ணமியில் சித்திரை பெரிய தேரோட்டமும் நடத்தப் படுவது வழக்கம். இங்குள்ள சித்திரை பெரிய தேர் சாதாரண நிலையில் 350 டன் எடையும், அலங்கார கட்டுமானத்துக்குப் பிறகு 450 டன் எடையும் உடையது. தேர் அடிமட்டத்திலிருந்து சுவாமி ஆசன பீடம் வரை 28 அடி உயரமும், தேரின் சுற்றுவிட்டம் 28 அடியும் இருக்கும். தேர் அலங்காரத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த உயரம் 110 அடியாக இருக்கும். இதற்குரிய பிரம்மாண்டமான 4 குதிரைகள் பொருத்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கினால் வீதியடைத்து, ஆடி அசைந்து, ஊர்ந்து வரும் அழகு சிறப்புவாய்ந்தது.

இந்நிலையில், நிகழாண்டு சித்திரைத் தேரோட்டத்தை ஏப்.26-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த மார்ச் 29-ம் தேதி தேர் கட்டுமானப் பணிக்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்று, தேர் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இதற்கிடையே, கரோனா பரவல் காரணமாக திருவிழாக் களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதால், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டமும் ரத்து செய்யப் பட்டுள்ளது. ஆனால், சித்திரை திருவிழாவுக்கான சுவாமி புறப் பாடு நிகழ்ச்சிகளை கோயில் உள்பிரகாரத்தில் எளிய முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் மாசி மக திருவிழாவின்போது, சிவன் மற்றும் பெருமாள் கோயில்களின் தேரோட்டங்கள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், நிகழாண்டு சாரங்க பாணி கோயில் சித்திரைத் தேரோட்டமும் நடைபெறும் என பக்தர்கள் காத்திருந்த நிலையில், தொடர்ந்து 2-வது ஆண்டாக சித்திரை பெரிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கும்பகோணம் பகுதியில் உள்ள பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்