காரைக்குடி - தேவகோட்டை இடையே முதன்முதலாக மாசு ஏற்படுத்தாத பேருந்து இயக்கம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் இருந்து தேவ கோட்டைக்கு முதன்முதலாக மாசு ஏற்படுத்தாத வகையில் வடி வமைக்கப்பட்ட தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பேருந்துகளில் உள்ள டீசல் இன்ஜின்கள் டீசலை எரித்து இயக்க சக்தியாக மாற்றி பேருந்துகளை இயக்கு கின்றன. வாகனங்களில் பெட்ரோல் , டீசல் எரிக்கப்படும் போது வெளியாகும் புகை மற்றும் அதில் இருந்து வரும் நுண்ணிய கரித்துகள்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ் 6) மாசு உமிழ்வு விதிகளை 2020 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இதையடுத்து பிஎஸ் 6 வாகனங்களுக்குரிய பெட்ரோல், டீசலை எண்ணெய் நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. இருந்தபோதிலும் முழுமையாக பிஎஸ் 6 வாகனங்களின் விலை, எரிபொருட்கள் கிடைப்பதில் சிக்கல் போன்ற காரணங்களால் இன்னும் பிஎஸ் 6 வாகனங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.

பெரும்பாலும் பிஎஸ் 4 வாகனங்களே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் போக்குவரத்து நிறுவனம் சார்பில் காரைக்குடி, தேவகோட்டை இடையே பிஎஸ் 6-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் ஜெய்கணேஷ் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்திலேயே இங்குதான் முதல் முறையாக இந்தப் பேருந்தை இயக்குகிறோம். இந்த பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இது ஸ்டேஜ் 6 (பி.எஸ்.6) வாகனம். மேலும் இதில் உள்ள இன்ஜின் மைக்ரோ அளவிலேயே புகையை வெளியிடும். ஆனால் நுண்ணிய கரித்துகள்களை வெளியிடாது. இந்த இன்ஜின் விலை ரூ.26 லட்சம். ஆனால், சாதாரண இன்ஜின் விலை ரூ.19 லட்சம் தான்.

மற்ற வாகனங்களில் இருப்பது போல, புகைபோக்கி இருந்தாலும் பார்வையில் தெரியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தை இயக்குவதற்கும் எளிதாக உள்ளது. பயணிகளுக்கும் சொகுசாக உள்ளது, என்று கூறினார்.

பேருந்தை அசோக் லேண்ட் தயாரித்துள்ளது. இது ஸ்டேஜ் 6 (பி.எஸ்.6) வாகனம். மேலும் இதில் உள்ள இன்ஜின் மைக்ரோ அளவிலேயே புகையை வெளியிடும். ஆனால் நுண்ணிய கரித்துகள்களை வெளியிடாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்