காப்புக் காட்டுப் பகுதிகளில் வாகனங்களில் சிக்கி உயிர் துறக்கும் புள்ளி மான்கள்

By செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் வார சந்தைப் பகுதியில் நேற்று அதிகாலையில் சாலையைக் கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் புள்ளி மான் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சிதம்பரம் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசியா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மானை கைப்பற்றினர். காட் டுன்னார்கோவில் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பிச்சாவரம் காப்பு காட்டில் மானை புதைத்தனர். இது போல நேற்று சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடைப்பகுதியில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அப்போது அங்குள்ள நாய்கள் மானை துரத்தி சென்று கடிக்க முயன்றுள்ளன. பொதுமக்கள் மானை நாய்களிடமிருந்து காப்பாற்றி அப்பகுதியிலேயே கட்டிப்போட்டனர்.

மானுக்கு காலில் எலும்புமுறிவும், ரத்த காயமும் ஏற்பட்டிருந்தது. தகவலறிந்த சிதம்பரம் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் மானை மீட்டு வானமாதேவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் மானை விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் விட நடவடிக்கை மேற்கொண்டனர். கருவேப்புலங்குறிஞ்சி காப்பு காட்டில் இருந்து மான்கள் வழி தவறி இப்பகுதிகளுக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

21 mins ago

தமிழகம்

58 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்