தென்கிழக்கு திசை காற்று வீச வாய்ப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் குறையும்

By செய்திப்பிரிவு

தென்கிழக்கு திசையில் இருந்து தமிழகம் நோக்கி காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறையக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 5, 6-ம் தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளிலிருந்து தமிழகப் பகுதிநோக்கி காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறையக் கூடும்.

7, 8-ம் தேதிகளில் தெற்கு, தென்கிழக்கு திசை காற்றால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.வளிமண்டலத்தில் நிலவும் காற்றுசுழற்சியால் வடதமிழக மாவட்டங்களில் 5-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்