திருவாரூர் அருகே 140 தங்கக் காசு புதையல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் குட வாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனைவடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல் லப்பா(50). இவர், தினமும் காலை யில் மாடுகளை மேய்க்க வயல் களுக்குச் செல்வார்.

வழக்கம்போல நேற்று காலை அவர் மாடு மேய்க்க வயலுக்குச் சென்றபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. பின்னர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது தங்கக் காசுகள் கொண்ட குடுவை இருந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி யடைந்த செல்லப்பா, யாருக்கும் தெரியாமல் புதையலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், புதையல் கிடைத்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர், வருவாய்த் துறையி னருக்குத் தகவல் தெரிவித்துள்ள னர். இதையடுத்து, குடவாசல் வட்டாட்சியர் சொக்கநாதன், விவ சாயி செல்லப்பாவிடமிருந்த புதை யலைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டார். அந்தக் குடுவை யில் 140 தங்கக் காசுகள் மற்றும் 80 கிராம் எடையிலான தங்கக் கட்டி இருந்தது. இவை சுமார் 200 ஆண்டுகள் பழமை யானவை என்று கூறப்படுகிறது. புதையல் கிடைத்த இடத்தில் மேலும் சில பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதால், அங்கு தோண் டிப்பார்க்க வருவாய்த் துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்