சுதந்திர இந்தியாவின் வைரவிழா கண்காட்சி தொடக்கம்: சென்னை சென்ட்ரலில் மக்கள் பார்வையிடலாம்

By செய்திப்பிரிவு

இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு, மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில்பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் சென்னை மண்டலஅலுவலகம் சார்பில் ‘சுதந்திர இந்தியாவின் வைர விழா சிறப்பு கண்காட்சி’ சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று தொடங்கியது.

இக்கண்காட்சியை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் சச்சின் புனிதாதொடங்கிவைத்து பார்வையிட்டார்.

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை கொண்டாடும் வகையிலும், சுதந்திரத்தைப் போற்றும்வகையிலும் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான பாரம்பரிய புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகைப்படங்கள், அவர்களது குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்