கருணாநிதி கொடுத்த இலவச டிவி இன்றும் இயங்குகிறது: திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்

By செய்திப்பிரிவு

‘கருணாநிதி கொடுத்த தொலைக்காட்சி தரமாக இருந்ததால் இன்றும் இயங்குகிறது. ஆனால் ஜெயலலிதா கொடுத்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இயங்காமல் காயலாங்கடைக்கு போய்விட்டது,’’ என்று திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் பேசினார்.

இளையாத்தான்குடி, ஆவினிப்பட்டி, சந்திரன்பட்டி, கணக்கன்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2006-ல் கருணாநிதி கூறியபடி, அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார். அவர் கொடுத்த தொலைக்காட்சி தரமாக இருந்ததால் இன்றும் இயங்குகிறது. ஆனால் ஜெயலலிதா கொடுத்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஓடாமல் காயலாங்கடைக்கு போய்விட்டன.

அதேபோல் அதிமுக 2016-ம் ஆண்டு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. செல்போன், ‘ஒய்-பை’ கொடுப்பதாக கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. நாங்கள் 2006-ல் செய்ததை போல், இந்த தேர்தலில் கூறிய 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவோம்.

கரோனா நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தொகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் விடுப்பட்ட பகுதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் கிராமமக்களின் தேவைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும், என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

24 mins ago

தமிழகம்

26 mins ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்