குஜராத்தில் கரோனா பரவல் அதிகரிப்பு: அகமதாபாத்தில் ஏரிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவை இன்று முதல் மூடப்படவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக குறைந்திருந்த கரோனா தொற்றின் தாக்கம், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிக அளவில் காணப்படுகிறது.

இதனிடையே, குஜராத் மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக தினசரி வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அகமதாபாத் நகரில் கரோனா வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பு வரை40-க்குள் இருந்த தினசரி தொற்று பாதிப்பு இப்போது 250-க்கும் மேலாக பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அகமதாபாத் நகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, அகமதாபாத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான விலங்கியல் பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், நீர்நிலை சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை இன்று முதல் மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்