கரோனா தடுப்பூசி போடுவதாகக் கூறி பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி 19 பவுன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

திட்டக்குடி அருகே கரோனா தடுப்பூசி செலுத்துவதாக கூறி மயக்க ஊசி செலுத்தி, உறவினர் வீட்டில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராசாத்தி. இவரது அத்தை மகளானபெரம்பலூர் மாவட்டம் கீழகுடி காட்டைச் சேர்ந்த சத்யபிரியா(31) என்பவர் லக்கூரிலுள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினரிடம் உங்களுக்கு கரோனா தடுப்பு ஊசி வாங்கி வந்துள்ளதாகவும், அதை செலுத்திக் கொண்டால் கரோனா வராது என கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் ஊசி போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் சத்யபிரியா மயக்க ஊசி செலுத்தியுள்ளார். ஊசி போட்ட பிறகு நால்வரும் மயக்கத்தில் உறங்கினர். இதை அடுத்து சத்யபிரியா,கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராசாத்தி கழுத்தில் இருந்த 6 பவுன் செயின், மூத்த மகள் கிருத்திகா கழுத்தில் இருந்த 10 பவுன் செயின்,1 பவுன் செயின் மற்றொரு மகளான மோனிகா அணிந்திருந்த 2 பவுன் செயின் மொத்தம் 19 பவுன் நகைகளை கழட்டிக் கொண்டு நள்ளிரவிலேயே சத்யபிரியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

மயக்கம் தெளிந்து நேற்றுக் காலை எழுந்த கிருஷ்ண மூர்த்தியின் குடும்பத்தினர் கழுத் தில் அணிந்திருந்த நகைகள் இல்லாததை அறிந்தனர். ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய ராமநத்தம் போலீஸார் நகைகளோடு தலைமறைவான சத்யப்ரியாவை கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் நகை திருடியதை ஒப்புக்கொண்ட சத்யபிரியாதிருடிய நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் சத்யபிரியாவை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

வாழ்வியல்

2 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்