பொது இடங்களில் இருந்த 7102 அரசியல் விளம்பரங்கள் அகற்றம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் இருந்த சுவர் விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்ட 7102 கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரசு கட்டிடங்கள், சாலை மேம்பாலங்கள், பொது இடங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்ற வேண்டும். அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டும். அரசியல் கட்சி கொடிக் கம்பங்களை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்திருந்தார்.

அதன்படி 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பொது இடங்களில் இருந்த கட்சி சுவர் விளம்பரங்கள், பேனர்கள், போஸ்டர்கள், கட்சி கொடிக் கம்பங்கள் உட்பட 7 ஆயிரத்து 102 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

தனியார் இடங்களில் இருந்த 671 கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இதுவரை ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்