80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையை விளக்க வேண்டும்; வாக்குச் சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை தெளிவாக விளக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் கூறியதாவது:

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் வீடுகளில் இருந்து வாக்களித்து விட்டு,மீண்டும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தால், அதைஎவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த வழிமுறைகளை அரசியல்கட்சிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். வேட்பு மனுக்கள், வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு தொடர்பான படிவம் ஏ, பி ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க கூறியுள்ளோம்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): திமுகசார்பில் 12 கோரிக்கைகள் வைத்துள்ளோம். பிரதானமாக ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவைத் தொடங்கி விட்டனர். தேர்தல் அறிவிப்பு வந்த பின், பல அரசுநிறுவனங்களில் தேர்தல் அறிவிப்பு வந்த நிலையில், அவசர அவசர மாக முன்தேதியிட்டு பணி நியமனம்வழங்கப்படுகிறது. அதை ரத்து செய்ய கோரியுள்ளோம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு என்பது சந்தேகத்துக்குரியது. தபால் வாக்குகளில் தவறு நடைபெறும் என்பதால் அதை நீக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்த பின் அரசின் திட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது குறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ்குமார் (தேமுதிக): பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பறக்கும்படை சோதனை நடத்தப்பட வேண்டும். மக்களுக்குதெளிவான சின்னங்களை அளிக்கவேண்டும் என தெரிவித்துள்ளோம்.

தாமோதரன் (காங்கிரஸ்): பணப்பட்டுவாடாவை தடுப்பது எழுத்தளவில்தான் உள்ளது. தபால்வாக்குகளை முறைப்படுத்த வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். குற்றப் பின்னணி வேட்பாளர்களை பரிசீலனையின்போதே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பாலச்சந்திரன், பால் கனகராஜ் (பாஜக): மூத்த குடிமக்களுக்கு வாக்களிக்க தனியாக வரிசை அளித்தல், முன்னுரிமை அளிக்கும் வசதிஏற்படுத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மற்றும் அந்த வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், குற்ற விவரங்களை 3 முறை தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்பது விதி. இந்த விளம்பரம் தொடர்பான விளக்கம் கோரி யுள்ளோம்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தேர்தல் நடத்தை விதிகளை தமிழில் வழங்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களுக்கு கொள்கை வகுக்க வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்