ஸ்டாலின் பிறந்தநாளில் திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியீடு: துரைமுருகன் வெளியிட்டார்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி, திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் பிரச்சாரப் பாடல் திரையிடப்பட தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

முன்னதாக தனது பிறந்தநாள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட பிறந்தநாள் செய்தியில், "மார்ச் 1 - என்னுடைய பிறந்தநாள்! பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டியதில்லை; அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். மக்களின் நன்றிப் புன்னகையே மிகப்பெரிய வாழ்த்து! வாருங்கள்! நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான வளமான தமிழகத்தை அமைப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று காலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தந்தை பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார்.

ரிங்டோனில் பிரச்சாரம்..

ஏற்கெனவே, திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து தரப்பினருக்கும் இப்பாடல் வரிகளை கொண்டு சேர்க்கும் வகையில் பாடல் வரிகளை ‘மொபைல் ரிங்டோன்’ ஆக மாற்றப்பட்டு, அதனை முன்னணி அலைபேசி நிறுவனங்களின் மூலம் காலர் டியூனாக பெறும் வகையில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து:

ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி விசிக தலைவர் தொ.திருமாவளவன் அவருக்கு நேரில் வாழ்த்துச் சொல்லியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நீண்ட பிறந்தநாள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்