வாராக் கடன்களை வசூலித்துக்கொள்ள தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை குழுமம்: கல்விக் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை

By குள.சண்முகசுந்தரம்

வசூலிக்க முடியாத கல்விக் கடன்களுக்கான தொகையை வங்கிகளுக்கு வழங்குவதற்காக ‘தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை குழுமம்’ என்ற அமைப்பை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.

கல்விக் கடன் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற் கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாக ‘தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை குழுமம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் குழுமத்துடன் வங்கிகள் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இக்குழுமத்தின் நிபந்தனை களின்படி இனி, கல்விக் கடனுக்கு ஆதார் எண் அவசியம். கடன் கொடுத்த தகவலை ‘சிபில்’ உள் ளிட்ட கடன் தர நிறுவனங்களில் வங்கிகள் பதிவு செய்யவேண்டும். ஏழரை லட்சம் வரையிலான கடன் களுக்கு மூன்றாம் நபர் பிணை கோரக்கூடாது. கல்விக் கடன் களுக்கு ஆயுள் காப்பீடு செய்யக் கூடாது. கடன்களுக்காக ரிசர்வ் வங்கி விதிக்கும் அடிப்படை வட்டி விகிதத்திலிருந்து கல்விக் கடன்களுக்கு 2 சதவீதம் மட்டுமே கூடுதல் வட்டியை வங்கிகள் வசூலிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

கல்விக் கடனை மாணவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் தொடங்கியதும் மொத்தக் கடனில் ஆண்டுக்கு 0.5 சதவீதத்தை வங்கி கள் இந்தக் குழுமத்தில் உத்தர வாதக் கட்டணமாக செலுத்த வேண் டும். இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாமல் போனால் அதை தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை குழுமமே வங்கிகளுக்கு வழங்கிவிடும்.

ஆனால் அதற்கு முன்பாக, கடனை வசூலிப்பதற்கான சட்டப் பூர்வமான அனைத்து நடவடிக்கை களையும் வங்கிகள் தரப்பில் எடுத்திருக்க வேண்டும். மேலும், கடன் வழங்குவதிலோ திருப்பி வசூலிப்பதிலோ இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகள் தவறு செய்தால் அடிப் படை வட்டி விகிதத்தைவிட கூடுத லாக 4 சதவீத வட்டியை வங்கி களிடம் குழுமம் அபராதமாக வசூலிக்கும்.

அதேசமயம் ரூ.7.5 லட்சம் வரை யிலான கடன்களுக்கு மட்டுமே இந்தக் குழுமத்தில் வங்கிகள் இழப்பீடு பெறமுடியும். வாராக் கடன்களுக்கான தொகையில் 75 சதவீதத்தை உடனடியாக இந்தக் குழுமம் வங்கிகளுக்கு வழங்கும். அதன் பிறகும் கடன்தாரர்களி டமிருந்து கடனை வசூலிக்க முடி யாமல் போனால் எஞ்சிய தொகை யும் வழங்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் பணி யில் சேரும் பட்சத்தில் அவர்கள் பணி செய்யும் நிறுவனத்திலிருந்து நேரடியாக கல்விக் கடனை குழுமமே வசூலித்துக் கொள்ளும்.

இத்திட்டத்துக்காக ரூ.2000 கோடி ரூபாய் நிதி அறிவித்திருக்கும் மத்திய அரசு, முதல் கட்டமாக ரூ.500 கோடியை ஒதுக்கி உள்ளது. அண்மையில் மத்திய அரசிதழில் இந்தத் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் மா.ராஜ்குமார், ‘‘கல்விக் கடன் கோரும் மாணவர்கள் இனி கணினி வழியாகவே அப்ளி கேஷன் கொடுக்கலாம். இதற் காகவே இணையத்தில் ‘வித்யா லட்சுமி போர்ட்டல்’ தொடங்கப்பட் டுள்ளது. இதன் வழியாக மாண வர்கள் தாங்கள் விரும்பும் வங்கி யில் கல்விக் கடன் கோரலாம். வங்கிகள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தால் இணையம் வழியா கவே ஒப்புதல் ஆணையும் வந்து விடும்.

இந்நிலையில், தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை குழுமம் தொடங்கப்பட்டிருப்பதும் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் தான். எனினும், கல்விக் கடன் உத்தரவாதம் பெறத் தகுதியான கல்வி நிறுவனங்களை குழுமம் தான் தீர்மானிக்கும் என்பதை ஏற்க முடியாது.

கல்விக் கடன் திட்டத்தின் செயல்பாடுகளை கண் காணிக்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்தக் குழுமம் செயல்பட்டால் கல்விக் கடன் திட்டம் செம்மையாக செயல்படுத்தப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்