கனமழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "9.11.2015 அன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், விசூர் கிராமத்தைச் சேர்ந்த உத்தரவேல் என்பவரின் மனைவி வாசுகி, மகள் கௌசல்யா, செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் அசோக் உயிரிழந்தார்.

10.11.2015 அன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவரின் மனைவி செல்வி, வீரமணி என்பவரின் மகன் சிவா, வீரன் என்பவரின் மனைவி செல்வி, மகன்கள் மாரிமுத்து, பெருமாள், வீரமுத்து, மகள் பவானி, சிவசங்கர் என்பவரின் மகன் தினேஷ், சிங்காரவேல் என்பவரின் மகன் நடேசன், சிவசங்கர் என்பவரின் மகள் பிச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி நகரத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் உதயகுமாரி, பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவரின் மகள் பூமிகா ஆகியோர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

9.11.2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், குடிமியாண்டிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் குழந்தை பவித்ரா; திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பச்சிரத்தான் என்பவரின் மகன் நாயகம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீரதனகிரி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரின் மகன் அரிகிருஷ்ணன் மழையின் காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

க்ரைம்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்