வயது சலுகை முடிய ஒரு வார காலமே உள்ளது: செல்வமகள் திட்டம் குறித்து அஞ்சல்துறை தகவல்

By செய்திப்பிரிவு

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கான வயது சலுகை முடிவடைய இன்னும் ஒரு வார காலமே உள்ளதால், பொது மக்கள் சலுகையை பயன்படுத் திக்கொள்ள வேண்டும் என்று அஞ் சல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

செல்வமகள் சேமிப்பு கணக்கு என்று பிரபலமாக வழங்கப்படும் சுகன்யா சம்ரித்தி கணக்கு, கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு தொடங்கிய இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்றாலும், இதற்கு 2 ஆண்டு கால சலுகை அளிக்கும் விதமாக 12 வயதான குழந்தைகளும் கணக்கு தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 03.12.2003 முதல் 02.12.2005 வரை பிறந்த பெண் குழந்தைகளும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இச்சலுகை வரும் டிசம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு இன்னம் ஒரு வார காலமே உள்ளதால், பொதுமக்கள் இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்