தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் இலவச சிகிச்சை இல்லை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் பெங்களூரு மிகவும் பின் தங்கியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் இதுவரை வெறும் 35 சதவீத சுகாதாரப் பணியாளர்களும் 13 சதவீத முன்களப் பணியாளர்களும் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது மக்களின் தனிப்பட்ட‌ விருப்பம். ஆனால் அரசு சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும்போது, அதனை அவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கான ஒட்டுமொத்த செலவையும் அரசு ஏற்றுக்கொண்டு, மக்களின் நலனுக்காக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செலவையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே கரோனா தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அரசுக்கு திட்ட அறிக்கை ஒன்றை பெங்களூரு மாநகராட்சி சார்பில் அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்