வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு எம்எல்ஏ உறவினர்களுக்கு ஒப்பந்தம்: திருச்சி ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By கி.மகாராஜன்

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு எம்எல்ஏ உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கருப்பூரைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கருப்பூர் கிராம ஊராட்சி துணைத் தலைவராக உள்ளேன். திருச்சி மாவட்டத்திற்கு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.38.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.3.38 கோடியும், மணப்பாறை ஒன்றியத்துக்கு ரூ.1.71 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் கிராம ஊராட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்தில் ஒப்பந்தம் வழங்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி சம்பந்தப்பட்ட பணியில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கே ஒப்பந்தம் வழங்க வேண்டும்.

இந்த வழிகாட்டு விதிகளை மீறி மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியங்களில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மருங்காபுரி ஒன்றியத்துக்கு அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின் மைத்துனர் பழனிச்சாமி, மனைவி தமிழ்செல்வி, மகன் பிரசாந்த் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள சிஆர்சிஎம் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமான நிறுவனம் 2020-ல் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணப்பாறை ஒன்றியத்துக்கு மருங்காபுரி ஒன்றிய அதிமுக செயலரின் தம்பிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஒன்றியங்களில் ஜல் ஜீவன் திட்டப் பணிகளுக்கு டிஆர்டிஏ பணம் வழங்க தடை விதிக்க வேண்டும்.

விதிகளை மீறி தகுதியற்றவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்