இந்திய ரயில்வேயில் முதல்முறையாக 3.5 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயில் இயக்கம்: தென்கிழக்கு மத்திய மண்டலம் சாதனை

By செய்திப்பிரிவு

இந்திய ரயில்வேயில் முதல்முறையாக 3.5 கி.மீ நீளம் கொண்ட பிரம்மாண்டமான சரக்கு ரயிலை இயக்கிசாதனை படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், சரக்கு ரயில்போக்குவரத்தை ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதிலும், தனியார் நிறுவனங்களின்தயாரிப்பு பொருட்களை கொண்டுசெல்லவும் ரயில்வே துறை முக்கிய பணியை ஆற்றி வருகிறது.

இந்நிலையில், இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் சரக்கு ரயில் போக்குவரத்தில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5 சரக்கு ரயில்களை இணைத்து 3.5 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயில் உருவாக்கப்பட்டது.

இந்த நீண்ட சரக்கு ரயில் மூலம் முதல்முறையாக பிலாஸ்பூர் ரயில் கோட்டத்தில் உள்ள பிலாய்-யில்இருந்து கோர்பாவுக்கு நேற்று முன்தினம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. மொத்தம் 224 கி.மீதொலைவை 7 மணி நேரத்தில் கடந்துள்ளது. `வாசுகி’ என்று பெயர்வைக்கப்பட்டுள்ள இந்த சரக்குரயில் இயக்கம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய சாதனையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

இந்தியா

16 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

25 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்