வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழா பாதியில் நிறுத்தம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியில்லை என ஆர்டிஓ நடவடிக்கை

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி அடுத்த நிம்மியம் பட்டு கிராமத்தில் எருது விடும் விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை எனக் கூறி போட்டி பாதியில் நிறுத்தப் பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தக் கோட்டை, நிம்மியம்பட்டு மற்றும் நாட்றாம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது.

நிம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 200 காளைகள் கலந்து கொண்டன. வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம் தலைமயைில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு போட்டிகள் தொடங்கின. காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. காளைகளை பின்தொடர்ந்து இளைஞர்கள் ஆரவாரத்துடன் ஓடினர். இந்நிலையில், ஆலங் காயம் பகுதியைச் சேர்ந்த அக்பர் (43) என்பவருக்கு சொந்தமான காளை இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அந்த காளையை இளைஞர்கள் விரட்டிச் சென்றபோது, காளை மிரண்டு ஓடியதில் சாலையோரம் இருந்த 70 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்தது.

இதில், அந்த காளைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கிணற்றுக் குள் காளை விழுந்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் ஆலங்காயம் தீயணைப்புத்துறை யினர் அங்கு விரைந்து சென்று அரை மணி நேரத்தில் காளையை கிணற் றுக்குள் இருந்து மீட்டனர். பிறகு, கால்நடை மருத்துவமனைக்கு காளை கொண்டு செல்லப்பட்டது.

காளை விடும் விழா நடை பெறும் இடத்தில் இருந்து சுற்று வட்டாரப்பகுதிகளில் தரைக் கிணறு இருக்கக்கூடாது என போட்டியின் விதிமுறையாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தாததால் கிணற் றுக்குள் காளை விழுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அங்கு சென்று விசா ரணை நடத்தினார்.

பிறகு, போட்டி நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை எனக்கூறி போட்டியை நிறுத்த உத்தரவிட்டார்.

அதன்படி எருது விடும் விழா பாதியில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாக் குழுவினர், வருவாய்த் துறை யினரிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். பிறகு, அரை மணி நேரத்துக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு போட்டி தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.

இதில் காளைகள் முட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். அவர்கள் மீட்கப் பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த கொத்தக்கொட்டாய் கிராமத்திலும் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், மாதனூர், நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 காளைகள் கலந்து கொண் டன. காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டி நண்பகல் 1.30 மணியளவில் முடிவடைந்தது. போட்டியில் குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வாணியம்பாடி காவல் துறை யினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். காளை விடும் விழாவை வேடிக்கை பார்க்க வந்த 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்றாம்பள்ளி அடுத்த கொத் தூர் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டி பகல் 1 மணியளவில் முடிவுற்றது.

இந்த போட்டியை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டார். இதில் காளைகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்றாம்பள்ளி காவல் துறையினர் மற்றும் வருவாயத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

21 mins ago

சினிமா

46 mins ago

இணைப்பிதழ்கள்

47 mins ago

வணிகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்