அதிமுகவில் அமைச்சர் மோகன் உட்பட 11 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: சென்னையில் 4 பேர் பதவி பறிப்பு

By செய்திப்பிரிவு

அமைச்சர் பி.மோகன் உட்பட அதிமுகவில் 11 மாவட்டச் செய லாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள் ளது. சென்னையில் 4 மாவட் டச் செயலாளர்களும் மாற்றப் பட்டுள்ளனர்.

அதிமுகவில் கிளைக்கழகம் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை நிர்வாகிகளை தேர்ந்தெடுப் பதற்காக கடந்த ஓராண்டாக தேர்தல் நடந்து வந்தது. அதில் தேர்வு செய் யப்பட்ட 50 மாவட்டங்களுக்கான செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் , பொருளாளர்கள் பட்டியலை முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

இதில் அமைச்சர் பி. மோகன் உட்பட ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களாக இருந்த 11 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் பி. மோகன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கதிர் தண்டபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 4 மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வெங்கடேஷ்பாபு எம்.பி.க்கு பதில் பி.வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெய லலிதா போட்டியிடுவதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்.

வடசென்னை தெற்கு மாவட் டச் செயலாளராக இருந்த பாலகங்காவுக்கு பதிலாக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.சீனிவாசன், தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் விருகை என்.ரவிக்கு பதிலாக தி.நகர் பி.சத்தியா, தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த சி.வி.என்.குமாரசாமி, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.என்.கிட்டுசாமி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் மேயர் கணபதி ப.ராஜ்குமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம், நீலகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோரும் மாற்றப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்ட 50 மாவட்டச் செயலாளர்களில் 18 பேர் அமைச் சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

26 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்