காவிரி பிரச்சினைக்கு நவ. 4-ல் போராட்டம்: முதல்வருடன் விவசாயிகள் சந்திப்பு

By செய்திப்பிரிவு

காவிரி பிரச்சினை தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தனர்.

காவிரி பிரச்சினை உட்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் அர்ஜுணன், ரங்கம் பாலு தீட்சிதர், வரத ராஜன், டி.பி.ராஜேந்திரன், ஹேம நாதன் ஆகியோர் முதல்வர் ஜெய லலிதாவை சந்திக்க நேற்று நீலகிரி மாவட்டம் கோடநாடு வந்தனர். அப்போது, குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர் அர்ஜுணன் ஆகிய இருவருக்கு மட்டும் முதல்வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு காவிரி பிரச்சினை தொடர் பாக போராட முடிவு செய்யப்பட்டது. வரும் நவ.4-ம் தேதி நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வரை கேட்டுக்கொண்டோம். அதற்கு, முதல்வரும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் பங்கேற் கும் அதிமுக தலைவர்கள் பெயர் விரைவில் தெரிவிக்கப்படும்.

நீர்ப் பாசனத் துறைக்கு தனி அமைச்சகம், விற்பனை வரி ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உட்பட 28 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கினோம். கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்து, அந்தந்தத் துறை மூலமாக நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், நாளை (அக்.28) சென்னையிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களைச் சந்தித்து, உண்ணாவிரதப் போராட் டத்துக்கு ஆதரவு திரட்ட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்