புதுச்சேரி சட்டப்பேரவை அடுத்த வாரம் கூடுகிறதா? - அமைச்சரவை கூடி ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுவை அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று மாலை சட்டப்பேரவை வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் மல்லா டிகிருஷ்ணாராவ் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் விவாதித்த விஷயங்கள் தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, “அரசின் 2020-21-ம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள், சுவச் பாரத் மிஷன் திட்டம் நடைமுறைப்படுத்துதல், தொலைத்தொடர்பு துறைக்கான ஆப்டிக்கல் கேபிளுக்கு புதைவழித்தடம் அமைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், அரசுப் பள்ளி பெயர்களை தலைவர்களின் பெயருக்கு மாற்றம் செய்தல், கரோனா காலத்தில் மக்க ளுக்கு உணவு பொருட்கள், தேவையான உதவிகள் செய்தல் தொடர்பாக ரெட்டியார்பாளையம், பெரியக்கடை காவல் நிலையங்களில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுதல், அனைவருக்கும் காப்பீட்டு திட்டம், விஜயன் கமிட்டி பரிந்துரைகள் அமல், மாநில உரிமை வழங்கல் விவகாரம், தட்டாஞ்சாவடியில் சட்டப்பேரவை வளாகம் கட்டும் விவகாரம், பிசி மற்றும் குடியேறிய தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்குதல், சாராயம், கள் கடைகளில் கரோனா காலத்தில் இரு மாதங்களுக்கான கிஸ்தி தொகை ரத்து செய்தல், ஏனாம் பொறியியல் கல்லூரிகள் அப்துல் கலாம் பெயர் சூட்டுவது, கார்ப்பரேஷன் மற்றும் சொசைட்டிகளில் கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து புதுவை சட்டப் பேரவை கூடும் தேதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்று குறிப் பிட்டனர்.

சட்டப்பேரவை எப்போது கூடுகிறது என்பது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, “அநேகமாக அடுத்த வாரம் கூடும்” என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்