பாலமேட்டில் 2-வது பரிசை ஏற்க மாடுபிடி வீரர் மறுப்பு: கடந்த ஆண்டு கார் பரிசு பெற்றவர்

By செய்திப்பிரிவு

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர் இரண்டாவது பரிசை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை பாலமேட்டில் நேற்று விறு விறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டின் பரி சளிப்பு விழா மாலையில் நடந்தது. இதில் 18 காளைகளை அடக்கிய கருப் பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதல் பரிசு பெற்றார். அவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

அவர் கூறியதாவது: ‘‘ஜல்லிக்கட்டில் ஏற்கெனவே பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன். ஆனால், கார் பரிசு பெறு வது இதுதான் முதல் முறை. எனது நண் பர்கள் கொடுத்த உற்சாகம்தான் காரணம். பாலிடெக்னிக் படித்துள்ள எனக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்குச் செல்கிறேன். காவலர் தேர்வில் போதிய உயரமில்லாததால் வேலை கிடைக்கவில்லை. எனக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.

சிறந்த காளைக்கான முதல் பரிசை பாலமேடு யாதவா உறவின் முறைக்குச் சொந்தமான காளை பெற்றது. அந்தக் காளைக்கு அலங்காநல்லூரைச் சேர் ந்த பொன்குமார் வழங்கிய ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நாட்டினப் பசு வழங்கப்பட்டது.

அந்தப் பரிசை, காளையைப் பராமரித்த ஜெயராமன் பெற்றுக் கொண்டார். அவர் கூறுகையில், இந்தக் காளை எங்கள் சமுதாயத்துக்கே பெருமை தேடித் தந்துள்ளது.

இந்தப் பரிசு மற்றவர்களும் காளை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும். கரோனா காலத்தில் தடைபடாமல் காளை வளர்ப்போரை உற்சாகப்படுத்த ஜல்லிக்கட்டு நடத்திய அரசுக்கு நன்றி என்றார்.

17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு விழாக் குழுவினர் 2-வது பரிசாக ஒரு பவுன் தங்கக் காசு அறிவித்தனர். அதை ஏற்க மறுத்த பிரபாகரன் விழாக் குழுவினரிடம், ‘‘நான்தான் 18 காளை களை அடக்கினேன். நீங்கள் தீர ஆய்வு செய்து பரிசை வழங்குங்கள். அதுவரை இந்தப் பரிசை நான் ஏற்கப் போ வதில்லை,’’ என்று கூறிவிட்டுச் சென்றார். விழாக் குழுவினர் அவரைச் சமாதானம் செய்தும் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

இது குறித்து பிரபாகரன் கூறுகையில், கடந்த முறை நான்தான் பாலமேட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசு பெற்றேன். அதே நபருக்கு, மீண்டும் கார் வழங்க வேண்டுமா? என்று விழாக்கு ழுவினர் பரிசை மாற்றி 18 காளைகளைப் பிடித்த என்னை 17 காளைகள் பிடித் ததாக மாற்றிவிட்டனர். என்னிடம் 18 காளைகளைப் பிடித்ததற்கான வீடியோ காட்சி உள்ளது, என்றார்.

மாணிக்கம் எம்எல்ஏ கூறுகையில், விழாக்குழுவினர் எடுத் ததுதான் இறுதி முடிவு. சமாதானம் செய்து அவரிடம் பரிசு ஒப்படைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

19 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்