600-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் கண்டுகளித்தனர்

By என்.சன்னாசி

பொங்கல் பண்டிையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. அமைச்சர் செல்லூர் கே.ராஜு கொடியைசைத்து தொடங்கி வைத்தார். ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் வாடிவாசலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடபட்டன.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் களமிறங்கின. பதிவான காளைகள் எண்ணிக்கை 1261. சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடபட்டன. வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்ககாசு, மிக்சி, பேன், கிரைண்டர், சைக்கிள் மோாட்டார்ை சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை காண, திமுக மாநில இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் காலை 11.15 மணிக்கு மேடைக்கு வந்தார்.

தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்தி 12.5 மணிக்கு ஜல்லிக்கட்டு மேடைக்கு வந்தார். இருவரும் அருகருகே அமர்ந்து, வாடிவாசலில் துள்ளி விளையாடிய காளைகள்,மாடிபிடி வீரர்களை கண்டு மகிழ்ந்தனர். சிறந்த மாடி பிடி வீரர்களுக்கு ராகுல்,உதயநதி ஸ்டாலின் தங்க மோதிரம், தங்ககாசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர், சுமார் 40 நிமிடம் ஜல்லிக்கட்டை பார்த்த ராகுல் மேடையில் பேசியதாவது:

தமிழக பாரம்பரிய இந்த விழா ஏற்பாட்டை பார்க்கும் போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. ஜல்லிகட்டு போட்டியை நேரில் பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது. இதுே போன்ற தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு முக்கியம். அதனை கொண்டாட இங்கு வந்திருக்கிறேன். இந்த கலாச்சார விழாவை ஏற்பாடு செய்து நடத்துபவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.

தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்துவருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை. தமிழர்களின் கலாச்சாரம் உணர்ச்சிகளை நேசிக்கவே அவனியாபுரம் வந்துள்ளேன்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் மாடுபிடி இளைஞர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
என்றார். ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தமிழில் மொழிபெயர்த்தார். ராகுல் சார்பில், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு 2 பைக் பரிசளிக்கப்பட்டது.

விழா மேடையில் உதயநிதி பேசும்போது, மதுரை என்றால் வீரம். அவனியாபுரத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன். இனி ஆண்டு தோறும் வருவேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்.

முன்னதாக ராகுல் வருகையைெயொட்டி மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கருப்புக்கொடி காட்ட முயன்ற பாஜக, இந்து முன்னணிையைச் சேர்ந்த 10க்கும்மேற்பட்டவர்கள் கைது செய்யபட்டனர். ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்த ராகுல் காந்திக்கு பழங்காநத்தம், தெற்குவாசல் க்ரைம் பிரான்ஞ் ஆகிய இடங்களில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் உறசாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் காங்கிரஸார் ஏற்பாடு செய்திருந்த நாட்புற கலைநிகழ்ச்சியை ராகுல் கண்டுகளித்தார்.

இதன் பின் மதுரை தென்பழஞ்சியில் நடந்த பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். மாலை 3 மணிக்கு மேல் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ராகுல் வருகைையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ராகுல் காந்தியுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாணிக்கம் தாகூர் எம்பி, ராமசாமி எம்எல்ஏ உள்ளிட்டோரும் ஜல்லிக்கட்டு விழாவை பார்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்