புதுச்சேரி- பெங்களூர் விமான சேவை 6 மாதங்களில் மீண்டும் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி-பெங்களூரு இடையே யான விமான சேவை 6 மாதங்களில் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை யில் விமானநிலையம் அமைந் துள்ளது. தொடக்கத்தில் சிறிய ரக டோர்னியர் விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன. பெரிய விமானங்களை இயக்க, கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது.

புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17-ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுவையில் இருந்து பெங்க ளூருக்கு விமானங்கள் இயக்கப் பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து புதுவையில் இருந்து காரைக்கால், திருப்பதி, சென்னை நகரங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க அரசு திட்டமிட்டது. அந்த திட்டத் தையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிர்வாகம் புதுவை மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் மீண்டும் போக்குவரத்து சேவை யைத் தொடங்க முடிவு செய்யப் பட்டது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான போக்கு வரத்து சேவை தொடங்கியது. புதன்கிழமை தவிர 6 நாட்களும் 48 இருக்கைகள் கொண்ட விமானம் இயக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு விமானம் வந்து, பின்னர் இங்கிருந்து பெங்களூர் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏது மின்றி நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, "கடந்த 15-ம் தேதி முதல் தற்காலிகமாக இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் விமான சேவை எப்போது தொடங்கப்படும் என தெரியாது" என்றனர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரி களை தொடர்பு கொண்ட போது, விமான சேவை நிறுத்தத்துக்கான காரணத்தை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

13 mins ago

சினிமா

21 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

25 mins ago

விளையாட்டு

41 mins ago

வாழ்வியல்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்