உயர் நீதிமன்றத்துக்கு 11 நாள் கிறிஸ்துமஸ் விடுமுறை 

By கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிச. 24 முதல் ஜனவரி 3 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை காலத்தில் டிச. 30-ல் அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறை கால நீதிமன்றம் செயல்படுகிறது.

அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமசாமி, ஜி.சந்திரசேகரன், எஸ்.சிவஞானம், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்ஜாமீன், வி.சிவஞானம் ஜாமீன் மனுக்களை விசாரிக்கின்றனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனித்தனியாகவும் முறையே ரிட் மனுக்கள், குற்றவியல் மனுக்களை விசாரிக்கின்றனர் என பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சுற்றுலா

21 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்