தாம்பரத்தில் சாலை விரிவாக்கத்தால் நிலத்தை இழந்த குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

தாம்பரத்தில் சாலை விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம்பரம் எம்எல்ஏ-வின் முயற்சியால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் கிழக்கு பகுதியில் பாரத மாதா தெரு மற்றும் வேளச்சேரி சாலையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதனிடையே, கடந்த2010-11 ஆண்டில் சாலை விரிவாக்கத்துக்காக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கடைகள் அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை வைத்தனர். மாற்று இடம் வழங்கப்படும் என அப்போதைய அரசு அதிகாரிகள் உறுதி அளித்து அவர்களுக்கு டோக்கன் வழங்கினர். ஆனால், உறுதி அளித்ததுபோல் மாற்று இடம் வழங்கப்படவில்லை. பலமுறை தமிழக அரசு கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் தங்களுக்கு இடம் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்எல்ஏ-வின் தீவிர முயற்சியால் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 74 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 43 குடும்பங்களுக்கும் வீடு ஒதுக்கீடு ஆணையை எம்எல்ஏ ராஜாவழங்கினார். ஆணையைப் பெற்றுக்கொண்ட மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் கடந்த 2018-ம்ஆண்டு வேளச்சேரி சாலையில் 31 குடும்பங்களுக்கு பெரும்பாக்கத்தில் ஏற்கெனவே வீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

49 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

57 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்