நெல்லூர்பேட்டை ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறியதால் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

By செய்திப்பிரிவு

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள குடியிருப்புக ளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கவுன்டன்யா ஆற்றில் புயல் பாதிப் பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால், கவுன்டன்யா ஆற்றை நம்பியுள்ள பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளஏரிகள் வேகமாக நிரம்பி வருகின் றன. குறிப்பாக, குடியாத்தம் நெல் லூர்பேட்டை ஏரி 5 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல்லூர்பேட்டை பெரிய ஏரி நிரம்பியதால் அருகே உள்ள ஏரிகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், கால்வாய்களை முறையாக தூர்வாராததால் நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வெளியேற வழியில்லாமல் அருகே உள்ள சாமுண்டிபுரம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

வீடுகள் அனைத்திலும் புகுந்த வெள்ள நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே, பொதுப்பணித் துறையினர் உடனடியாக கால்வாய்களை தூர் வாரி ஏரியிலிருந்து உபரி நீர் கால்வாய் வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

44 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்