மெரினா கடற்கரை தள்ளுவண்டி டெண்டர்: இரண்டு நிறுவனங்களுக்குப் பிரித்து அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பாகக் கோரப்பட்ட டெண்டரை இரு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், தள்ளுவண்டிக் கடைகள் அமைப்பது தொடர்பாகக் கோரப்பட்ட டெண்டரை இரு நிறுவனங்களுக்குப் பகிர்ந்து வழங்குவது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின்படி காணொலிக் காட்சி மூலம் ஆஜரான மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இரு நிறுவனங்களுக்கும் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கும் பணிகளை வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 900 தள்ளுவண்டிக் கடைகளை இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இது சம்பந்தமான உத்தரவை வரும் ஏழாம் தேதி பிறப்பிக்க வேண்டும் எனவும், மூன்று மாதங்களில் 900 தள்ளுவண்டிக் கடைகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தள்ளுவண்டிக் கடைகளை உற்பத்தி செய்து வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க, தாமதமாகும் நாட்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதமானால் கடையின் மதிப்பில் 10 சதவீதத் தொகையையும் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் 50 சதவீதத் தொகையையும் பிடித்தம் செய்துகொள்ள சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடைகள் அமைக்கும் பணிகளை மாதம்தோறும் ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மூன்று மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டிக் கடைகள் தவிர வேறு எந்தக் கடைக்கும் இடமளிக்கக் கூடாது என்றும், இந்த 900 கடைகளைக் குலுக்கல் மூலம் விநியோகிப்பது தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

37 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்