மாணவிகளின் படிப்பு செலவை ஏற்ற திமுக நிர்வாகி

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழு செலவையும் திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் எஸ்.அய்யாதுரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகியுள்ள அரசு பள்ளிகளில் படித்த7 மாணவிகளின் 5 ஆண்டு படிப்புக்கான முழு செலவையும் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை - ஏ.வெங்டேஷ்குமார் நினைவு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், திமுக வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவருமான எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் ஏற்றுக் கொண்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 7 மாணவிகளின் எம்பிபிஎஸ் படிப்புக்கான முழுப் செலவையும் ஏற்பதாக அய்யாதுரைப் பாண்டியன் நேற்று அறிவித்தார்.

அந்த மாணவிகள் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றதாக திமுகதலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்