ஆவடி தொகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணி: அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு

By செய்திப்பிரிவு

ஆவடி தொகுதியில் மழைநீரைவெளியேற்றும் பணி உள்ளிட்டவைகளை நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சென்னையின் புறநகர் பகுதிகளாக விளங்கும் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு, ஆவடி,திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது. அவ்வாறு கொட்டும் கன மழை, சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வருகிறது. அதனை அகற்றும் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகள், திருநின்றவூர்- ராம்நகர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும்தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதுமட்டுமில்லாமல், பருத்திப்பட்டு ஏரி, திருநின்றவூர் ஈசா ஏரிகளின் நீர் இருப்பு குறித்தும், ஆவடியில் நடந்துவரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் குறித்தும் அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையருமான பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஏசுதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

24 mins ago

வணிகம்

38 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

51 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்