சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 7,439 மில்லியன் கனஅடி நீர்இருப்பு; ஒரேநாளில் 67 மில்லியன் கனஅடி நீர் உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 மில்லியன் கனஅடி நீ்ர் அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. நேற்றைய நீர் இருப்பு 1,786 மில்லியன் கனஅடி (55.28 சதவீதம்). ஏரிக்கு விநாடிக்கு 625 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. நீர் இருப்பு 178 மில்லியன் கனஅடி (16.47 சதவீதம்). விநாடிக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. நீர் இருப்பு 2,422 மில்லியன் கனஅடி (73.39 சதவீதம்). விநாடிக்கு 354 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. நீர் இருப்பு 2,913 மில்லியன் கனஅடி (79.92 சதவீதம்). இந்த ஏரியின் நீர்மட்டம் 24 அடி.நேற்றைய நீர்மட்டம் 21.32 அடியாக இருந்தது. கண்ணன்கோட்டை தேர்வாய்க்கண்டிகை ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கனஅடி. தற்போதைய நீர் இருப்பு 140 மில்லியன் கனஅடி (28 சதவீதம்).

மேற்கண்ட 5 குடிநீர் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கனஅடி. இதில் தற்போது 7,439 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. மழை பெய்வதால் நேற்று ஒரேநாளில் ஏரிகளுக்கு 67 மில்லியன் கனஅடி நீர் வந்து சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் புதிய ஏரியைத் தவிர்த்து 4 ஏரிகளிலும் 3,213 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் இருந்ததாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

தீவிர கண்காணிப்பு

தொடர்மழை காரணமாக ஏரிகளின் நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனால் ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏரிகளைக் கண்காணிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் வந்துவிடும் என்ற அச்சத்தில் ஏரிக் கரைகளை உடைத்த சம்பவங்கள் ஏற்கெனவே நடந்திருப்பதால், ஏரிப்பகுதிகளில் பொதுப்பணித் துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்