அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது; அமித் ஷா எங்கள் நண்பர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

By க.ரமேஷ்

அதிமுக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்வார்கள். எங்களது தேர்தல் பிரச்சாரம் எழுச்சியுடன் இருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று (நவ.22) இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். தெற்கு சன்னதியில் அவரை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் ராஜா தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர் ஆகியோர் கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக்குறுணி விநாயகர் மற்றும் சிவகாமி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நடராஜர் சன்னதிக்குச் சென்று அங்கிருந்த கோயில் மணியை அடித்து நடராஜரை வழிபட்டார். கோயிலை சுற்றிப் பார்த்த அமைச்சர், தீட்சிதர்களிடம் கோயில் வரலாறு குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கீழ சன்னதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சிதம்பரம் நடராஜர் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். இந்தக் கோயிலில் வழிபட்டால் அமைதி நிலவும் என்பதால் நான் சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அமித் ஷா எங்களுடைய நண்பர். விரைவில் அதிமுக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்வார்கள். எங்களது தேர்தல் பிரச்சாரம் எழுச்சியுடன் இருக்கும்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்