அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழாவுக்கு தடை விதித்ததால் 50 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: ரூ.15 கோடி மதிப்பில் வர்த்தகம் முடங்கும் என வணிகர்கள் அச்சம்

By இரா.தினேஷ்குமார்

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தடை விதித்ததால் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரூ.15 கோடி மதிப்பில் வர்த்தகம் முடங்கும் என வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதாக கூறி, தி.மலையில் கடந்த 8 மாதங்களாக ‘பவுர்ணமி கிரிவலம்’ செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்தன. இதனால், அண்ணாமலையார் கோயிலில் உலக புகழ்பெற்ற ‘கார்த்திகை தீபத் திருவிழா’ வழக்கம்போல் நடைபெறுமா? என பக்தர்களி டையே கேள்வி எழுந்துள்ளது.

துர்க்கை அம்மன் உற்சவத் துடன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள தீபத் திருவிழா, தொடர்ந்து 17 நாட்களுக்கு நடைபெறும். பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலா,நாயன்மார்கள் வீதி உலா, வெள்ளி தேரோட்டம், மகா தேரோட்டம், பிச்சாண்டவர் உற்சவம், பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்று தல், கிரிவலம், தெப்பல் உற்சவம் என திருவண்ணாமலை நகரமே ஆன்மிக விழாக்கோலம் பூண்டிருக் கும். 17 நாள் விழாவில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 32 லட்சம் பக்தர்கள் திரள் வார்கள். மகா தீபத்தன்று மட்டும் 15 லட்சம் பக்தர்கள் திரண்டு, கிரிவலம் சென்று அண்ணாமலை யாரை வழிபடுவது வழக்கம்.

தீபத் திருவிழாவுக்கு திரளும் பக்தர்களால் நடைபாதை வியாபாரிகள் முதல் பெரிய வணிக நிறுவன உரிமையாளர்கள் வரை பயனடைவர். அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில், கரோனா தொற்றை மேற்கோள்காட்டி கார்த்திகை தீபத் திருவிழாவை, கோயிலுக்கு உள்ளேயே மிக எளிமையாக நடத்த மாவட்ட நிர்வா கம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளதால், ஒட்டு மொத்த வணிகமும் அடியோடு பாதிக்கும் என அனைத்து நிலைவணிகர்களும் அச்சமடைந் துள்ளனர். ஏற்கெனவே, கரோனா தொற் றால் பல மாதங்கள் கடைகள் மூடப்பட்ட நிலையில், தீபத் திருவிழாவுக்கும் கட்டுப்பாடு விதிக் கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் முடங்கி போகும் என கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜசேகர் கூறும்போது, “மாதந்தோறும் நடைபெறும் கிரிவலத்தை நம்பி நடைபாதை வியாபாரிகள், வணிகர்கள் உள்ளனர். கடந்த 8 மாதங்களாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது, கார்த்திகை தீபத் திருவிழாவும் வழக்கம்போல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் ஒரு பேரிழப்பைசந்திக்க நேரிடும். திரையரங்கு களை திறந்துள்ளனர். மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அனைத்து பகுதி களிலும் மக்கள் கூட்டம் உள்ளது.

எனவே, ஆன்மிக திருவிழா வான கார்த்திகை தீபத் திருவிழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். சாமி வீதியுலா, மகா தேரோட்டம் என அனைத்தும் வழக்கம்போல் நடத்த வேண்டும். கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும். கார்த்திகை தீபத் திருவிழா வுக்கு வரும் பக்தர்களை நம்பி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், நூற்றுக்கணக்கான தேநீர்க் கடைகள், 200 உணவகங் கள், 250 தங்கும் விடுதிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடைகளை நடத்துபவர்கள் மற்றும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் அடங்குவர். தீபத் திருவிழா தடைபட்டதால், சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.15 கோடி மதிப்பில் நடைபெறும் வர்த்தகம் முடங்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, நடை பாதை வியாபாரிகள் உட்பட வணிகர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, கட்டுப்பாடுகளு டன் கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக பரிசீ லனை செய்ய வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 min ago

வாழ்வியல்

6 mins ago

ஜோதிடம்

32 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

36 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்