பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தலில் ஆதரவு: விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கு அறிவிக்கும் பிரதான கட்சிக்கு ஆதரவு அளிப்போம்’’ என தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்தின் நிறுவனத் தலைவர் வேதாந்தம் கூறினார்.

பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மகளிர் பிரிவு சார்பில், வெள்ளைக் குடை போராட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது. குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சாந்தி இப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, மாநிலத் தலைவர் வேதாந்தம் பேசியதாவது:

மது விற்பனை செய்வது மற்றும் மது குடிப்பதால் நாட்டின் பொருளாதாரம், கலாச்சாரம் சீரழிவதோடு, மக்களின் உடல் நிலை பாதித்து வருகிறது. நம்நாடு பாரம்பரிய கலாச்சாரம் கொண்டது. குடிப்பழக்கம் மனிதனை மிருக மாக மாற்றி உள்ளது. பள்ளி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை இன்று மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுவை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் இன்றைய நிலையைக் கண்டு வெட்கப்பட வேண்டும்.

ராஜாஜி பூரண மதுவிலக்கை அமல்படுத்தியபோது அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை தவிர்ப்பதற்காக முதன்முறை யாக விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார். அதுபோல் தமிழக அரசும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, இல வசங்கள் அளிப்பதை தவிர்க்க வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் பிரதான அரசியல் கட்சிக்கு விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு வேதாந்தம் கூறினார்.

இப்போராட்டத்தில், பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி, மாநில துணைத் தலைவர் கிரிஜா சேஷாத்ரி, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

58 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்