வீடுகளுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கும் திட்டம்: அறிமுகப்படுத்த மின்வாரியம் முடிவு

By செய்திப்பிரிவு

பாயின்ட் ஆஃப் சேல் கருவிமூலம், நுகர்வோரின் வீiட்டுக்கே சென்று மின்கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை மின்வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.

தமிழகத்தில் மின்வாரிய அலுவலகங்கள், அரசு இ-சேவைமையங்கள், அஞ்சல் நிலையங்கள், இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட மின்னணு முறை ஆகியவற்றின் மூலம், மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாயின்ட் ஆஃப் சேல் கருவி மூலம், கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க ஊழியர்கள் வரும்போது, அப்போதே கட்டணம்வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மின் கணக்கீட்டுக்கு வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்லும்போது அவர்களிடம் பாயின்ட் ஆஃப்சேல் கருவி வழங்கப்படும். அவர்கள் மின் கட்டணத்தை தெரிவிக்கும்போது, நுகர்வோர் அப்போதே, கட்டணத்தை செலுத்த விரும்பினால் டெபிட், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலுத்த லாம்.

இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்