ஆம்பூர் அடுத்த துருகம் காப்புக்காடுகளில் மரங்களை அழித்து நீர்வழிப்பாதை அமைப்பு: வனத்துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

ஆம்பூர் அருகே வனத்துறையினர் அனுமதியில்லாமல் வனப்பகுதி யில் நீர்வழிப்பாதை அமைத்துள்ள தாக இயற்கை ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் வனத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட துருகம் காப்புக்காடுகளையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்நிலையில், மிட்டாளம் அடுத்த ஊறல் குட்டையில் தொடங்கி வண்ணான்பாறை வரை அடர்ந்த வனப்பகுதியில் ஒரு சிலர் ‘பொக்லைன்’ இயந்திரங்களை கொண்டு மரங்களை அழித்து நீர்வழிப்பாதையை கடந்த சில நாட் களுக்கு முன்பு அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, "திருப் பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வனச் சரகம் அதிக பரப்பளவு கொண்டது. இந்நிலையில், வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள மரங்கள், செடிகளை அழிக்கின்றனர். விலை மதிப்புள்ள மரங்கள் வெட்டிக்கடத்தப்படுகின்றன.

மழைக்காலங்களில் வனப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளுக்கு வர வேண்டும் என்பதால் நீர் வழிப்பாதை அமைப்பதாக கூறி சிலர் ‘பொக்லைன்’ வாகனங்களை வனப்பகுதிக்குள் அனுமதியின்றி கொண்டு சென்று அங்குள்ள மரங் களை அழித்து நீர்வழிப் பாதையை அமைத்துள்ளனர்.

மிட்டாளம் அடுத்த ஊறல்குட்டையில் இருந்து வண்ணான் பாறை வரை ‘பொக்லைன்’ இயந்திரம் கொண்டு நீண்ட தொலைவுக்கு நீர்வழிப் பாதை அமைத்துள்ளனர். வனத்துறையினர் அனுமதியின்றி இந்தப் பணி கடந்த ஒருசில நாட் களில் நடந்துள்ளதாக தெரிகிறது. அடர்ந்த வனப்பகுதியில் நீர்வழிப்பாதை அமைப்பதாக கூறி அங்குள்ள மரங்கள், செடிகள் வேரோடு அகற்றப்பட்டுள்ளன. பெரிய, பெரிய பாறை களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி வனப்பகுதியில் இருந்து மொரம்பு மண்ணும் கடத்தப்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி அனுமதியின்றி வனப்பகுதியில் நீர்வழிப்பாதை அமைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம்" என்றனர்.

இதுகுறித்து ஆம்பூர் வனச் சரக அலுவலர் மூர்த்தியிடம் கேட்ட போது, "இது சம்பந்தமாக வனத் துறை மாவட்ட அலுவலர், மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. வனப்பகுதியில் அனுமதியின்றி நீர்வழிப்பாதை அமைத்தவர்கள் யாரென விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும், நில அளவையர்கள் உதவியுடன் நீர்வழிப்பாதை அளவீடு செய்ய உள்ளோம். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நீர்வழிப்பாதை அமைத் திருப்பது தெரியவந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் யாரென கண்ட றிந்து அவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

க்ரைம்

39 mins ago

வெற்றிக் கொடி

50 mins ago

விளையாட்டு

47 mins ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்