இந்தியன் வங்கியில் ஊழல் தடுப்பு வாரம்: நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி

By செய்திப்பிரிவு

இந்தியன் வங்கியில் ‘விழிப்பான இந்தியா, வளமையான இந்தியா’ என்ற கருத்துடன் ‘ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்’ கடந்த 27-ம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 2-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 27-ம் தேதி விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளை இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் செயல் இயக்குநர்கள் எம்.கே.பட்டாச்சார்யா, வி.வி.ஷெனாய், கே.ராமச்சந்திரன் ஆகியோர்ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இணையதளம் வழியிலான ஊழல் கண்காணிப்பு தளத்தை மத்திய ஊழல் தடுப்புஆணையர் சுரேஷ் என்.படேல் காணொலியில் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

பத்மஜா சுந்துரு பேசும்போது, நிர்வாகத்தின் அனைத்து செயல்பாடுகளும் குறைகள், ஊழல் இன்றி நேர்மையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அலகாபாத் வங்கி இணைக்கப்பட்ட பிறகு, செயல்பாடு ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறினார். இதில் பொது மேலாளர்கள், 14 கள பொது மேலாளர்கள், 78 மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் காணொலி வழியாக பங்கேற்றனர். தொடர்ந்து மண்டல, கிளை அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி, வங்கி ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ‘இண்ட்-விஜில்’ என்ற சிறப்பு இதழ் வெளியிடப்பட்டது. இதுகுறித்து எஃப்.எம். வானொலி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

சினிமா

26 mins ago

விளையாட்டு

32 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

44 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்