தஞ்சையில் 8 மாடி கட்டிட அபகரிப்பு புகார்: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 4 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் உள்ள 8 மாடி தங்கும் விடுதிக் கட்டிடத்தை அபகரித்துக் கொண்டதாக அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 4 பேர் மீது தஞ்சாவூர் நில அபகரிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

பெங்களூரு எம்.எஸ்.ஆர். நகரில் வசிப்பவர் க.நாகராணி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டிய 8 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாக, கடந்த 2011-ல் புகார் அளித்தார்.

புகாரில், “தங்கும் விடுதியைக் கட்ட திருச்சி ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றிருந்தேன். பணிகள் முழுமையடையாததால், அதை திறக்க இயலவில்லை. இந்த நிலை யில், வங்கியில் பெற்ற கடன் நிலு வைத்தொகை ரூ.1.15 கோடிக்காக, விடுதியை ஏலம் விடப்போவதாக, பத்திரிகையில் விளம்பரம் வெளி யானது.

இதையடுத்து, அமைச்சர் நேரு வின் உறவினர்கள் எனக் கூறிக் கொண்டு என்னைச் சந்தித்த திருச் சியைச் சேர்ந்த ராஜபூபதி, அவரது மகன் பரணிதரன் ஆகியோர் விடுதியை ரூ.5 கோடிக்கு லீசுக்கு கொடுக்குமாறு கேட்டனர்.

சொத்து ஏலம் போகாமல் இருக்க நானும் சம்மதித்தேன். இதற்காக, என்னை திருச்சி ஸ்டேட் வங்கிக்கு அழைத்துச் சென்று, அவர்களே கடனை அடைத்தனர். பின்னர், லீசுக்கு பத்திரம் எழுதி பதிவு செய்ய தஞ்சாவூர் பதிவு அலுவலகத்துக்கு காரில் சென்ற போது, லீஸ் பத்திரம்தான் எனக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கினர்.

ஆனால், மீதிப் பணம் தர வில்லை. அதை கேட்டபோது, கே.என்.நேரு, ராமஜெயம் ஆகி யோரின் பெயர்களைக் கூறி மிரட் டினர். போனில் பேசிய ராம ஜெயம், “விடுதியை கிரயம் செய்து விட்டோம். உயிர் பிழைக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டை விட்டே ஓடிவிடு” என்று மிரட்டினார். இதனால், நான் குடும்பத்துடன் பெங்களூரு சென்றுவிட்டேன்.

ரூ.15 கோடி மதிப்புள்ள எனது கட்டிடத்தை போலி பத்திரம் தயார் செய்து, அபகரித்துக்கொண்ட ராஜபூபதி, பரணிதரன், கே.என்.நேரு, ராமஜெயம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, இடத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத் தெரி வித்திருந்தார்.

நில அபகரிப்பு பிரிவில் அளிக்கப் பட்ட இந்த புகார் மீது, போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நாகராணி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரிக்கு மாறு நில அபகரிப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் நட வடிக்கை இல்லை என தெரிகிறது.

தற்போது, மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடிய நாகராணி யின் வழக்கை விசாரித்த நீதிமன் றம், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அக் டோபர் 16-ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஒப்படைக்க கடந்த வாரம் உத்தரவிட்டது.

அதன்படி, தஞ்சாவூர் நில அபகரிப்பு பிரிவு போலீஸார் நேற்று ராஜபூபதி, பரணிதரன், கே.என்.நேரு, கே.என்.ராமஜெயம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து நில அபகரிப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “உயர் நீதிமன்ற உத் தரவுப்படி வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை தெரியவரும்” என் றனர்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

10 mins ago

இந்தியா

14 mins ago

சுற்றுலா

38 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்